உயர் இரத்த அழுத்தம்


 இரத்த நாளங்களில் ஏற்படக்கூடிய அழுத்தத்தின் மாறுபாடு அதிகரித்து காணப்பட்டால் உயர் இரத்த அழுத்தம் என்கிறோம்.

 காரணங்கள் 
புகைப்பிடித்தல், மது அருந்துதல், எண்ணெய், கொழுப்பு மற்றும் உப்பு கலந்த உணவுகளை அதிகம் எடுத்தல், உடல் பருமன் ,மன அழுத்தம்.

அறிகுறிகள்
பெரும்பாலும் அறிகுறிகள் இல்லாமலும் வரலாம்.
 • கடும் தலைவலி 
• சோர்வு மற்றும் குழப்பமான மனநிலை . 
• பார்வை பிரச்சனை .
• நெஞ்சுவலி (அ) மூச்சுவிட சிரமப்படுதல் .
• படபடப்பு

 வீட்டு வைத்தியம்:

 துளசி தேநீர் அருந்தலாம். பூண்டு பால் எடுக்கலாம். இலவங்கப்பட்டை, ஏலக்காய், இஞ்சி, சோம்பு போன்ற மூலிகைகள் கலந்து தேநீர் அருந்தலாம். செம்பருத்தி தேநீர் குடிக்கலாம். 

                                        
ஆயுர்வேத சிகிச்சை
மருதம் பட்டை கஷாயம் அஷ்வகந்தா சூரணம் கார்டோகேர் மருந்து சர்பகந்தாதி போன்ற மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுக்கலாம். 

           
செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை: 

  • அதிக எண்ணெய், மசாலா மற்றம் உப்பு கலந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். 
  • புகைப்பிடித்தல், மது அருந்துதல் கூடாது. 
  • உடல் பருமனை குறைத்தல் வேண்டும். 
  • எளிய நடைப்பயற்சி, தியானம் மற்றும் யோகாசனங்கள் செய்வதால் மன அழுத்தம் குறைந்து இரத்த அழுத்தம் சீராகும். 

 குறிப்பிட்டுள்ள மருந்துகளை ஆயுர்வேத / சித்த / ஹோமியோபதி மருத்துவர்களின் ஆலோசனையின்படி மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

Comments