முதியோர் ஆரோக்கியத்திற்கு சித்த மருத்துவம்(மலச்சிக்கல்)

 மலச்சிக்கல்:

        மலச்சிக்கல் வராமல் தடுக்க தண்ணீர், காய்பழம் என உணவை மருந்தாக உட்கொள்ளலாம்.

        நாம் சாப்பிடும் உணவு வகைகளில் நார்ச்சத்து நிறைந்தகேழ்வரகு. தினைவரகுகொள்ளு போன்ற முழுத் தானிய உணவு வகைகள் மலச்சிக்கலைத் தவிர்க்க உதவும் (தவிடு நீக்கப்பட்ட தானியங்களில் நார்ச்சத்து இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்). வாழைத்தண்டுகாரட்முள்ளங்கி, முட்டைக்கோஸ்பாகற்காய்புடலங்காய்அவரைக்காய்கொத்தவரங்காய் போன்ற காய்கறிகள்பொட்டுக்கடலைகொண்டைக்கடலைமொச்சை போன்ற பருப்புகள்கீரைகள், ஆரஞ்சுகொய்யாமாதுளைஆப்பிள்அத்திப்பழம்பேரீச்சைமாம்பழம் போன்ற பழங்களில் நார்ச்சத்து அதிகம். இவற்றை தினசரி உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

        முதுமையில் பழங்கள் மிகவும் அவசியம். மலச்சிக்கலைப் போக்க கரையா நார்களையும்இதய குழாய்களின் கொழுப்பை அகற்ற கரையும் நார்களையும்செல் அழிவைப் போக்க பாலிபினால்களையும்ஆற்றலை நீடித்துத்தர 'காம்ப்ளேக்ஸ் கார்போஹைட்ரேட்டையும் தருபவை பழங்களே. தினமும் உணவில் ஒரு பகுதியாக பழங்கள் இருக்க வேண்டியது அவசியம்.

        மணலிக்கீரையை பாசிபருப்புடன் சேர்த்து கூட்டு தயார் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.

        திரிபலா சூரணம்பொன்னாவரை சூரணம்கடுக்காய் லேகியம்கடுக்காய் சூரணம்மூலக்குடோரி எண்ணெய்... என உடல் அமைப்புக்குத் தகுந்த நிறைய சித்த மருந்துகள் இருக்கின்றன.

        மலச்சிக்கல் தொடர்ந்து இருந்தால்மருத்துவரின் ஆலோசனையுடன் மருந்துகளை எடுத்துகொள்ளலாம். ஆரம்ப கட்டத்திலேயே உணவு முறைவாழ்க்கை முறை மூலம் மலச்சிக்கலை சரி செய்ய வேண்டும். இயலாத நிலையில் அவை மீண்டும் தொடரும் போது மருத்துவரின் உதவியை நாட வேண்டும்.

        இதயக் கோளாறுகள்கல்லீரல்சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள்மருத்துவர் பரிந்துரைப்படிஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர் தண்ணீர் அருந்தினால் போதுமானது.

Comments