முதியோர் ஆரோக்கியத்திற்கு சித்த மருத்துவம் (காய கற்பம்)

 

காய கற்பம் :
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். நோய்கள் வராமல் தடுத்து உடலை கல் போல காக்க பல்வேறு காய கற்பம் சொல்லப்பட்டுள்ளது. அவற்றுள் எளிதான காய கல்ப முறையாக.

o   காலையில் இஞ்சித் தேநீர்.

o   நடுப்பகலில் சுக்குக் காப்பி.

o   இரவு கடுக்காய்க் காப்பி.

தினமும் உண்டு வந்தால் எந்தவிதமான நோய்களும் அண்டாது.

எளிய யோகாசனப் பயிற்சி:

60 வயதில் எடையை குறைக்க முயற்சிக்கும் முதியவர்களுக்கு சிறந்த பயிற்சிகளில் ஒன்றாக யோகா இருக்கிறது . யோகா கலோரிகளை எரிக்க சிறப்பான மற்றும் உடலின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கவும் உதவும் (வயதானவர்கள் இரவில் நன்றாக தூங்கவும் யோகா உதவுகிறது).

o   பத்மாசனம்.

o   பத்திராசனம்.

o   சவாசனம்.

o   திரிகோணாசனம்.

உடற்பயிற்சி:

உடற்பயிற்சி தசையை வலிமையாக்கும்.நடைப்பயிற்சி எலும்புகளை வலிமையாக்கும். ஆகவே தினமும் முதியவர்கள், நடைப்பயிற்சி, உடற்பயிற்சி 30 நிமிடங்கள் செய்வதால், உடலின் நிலைப்பாட்டையும், ஒருமைப்பாட்டையும் அதிகரித்து, தடுமாறி கீழே விழுவதை தடுக்கிறது.

வயதானவர்களுக்கென தனி உணவு முறை:

      தானியங்கள் :

           அரிசி ,கேழ்வரகு,கம்பு,சோளம்.

      புரதம் :

          பால்,பீன்ஸ்,பட்டாணி, முட்டை, பயறு வகைகள்.

      கால்சியம் :

          பால், கேழ்வரகு, கீரைகள்

       இரும்புச்சத்து:

பனை வெல்லம், கீரைகள், தேன், பேரீச்சம்பழம், அத்திப்பழம். வைட்டமின் மற்றும் சி; பச்சைக் காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்கள்.

முதுமையில் உணவுத் தேவை மாறுபடும். எதையும் அளவோடு சாப்பிட வேண்டிய காலம், வயோதிகக் காலம் பசியின்மை மலச்சிக்கல் என பல பிரச்சினைகள் படையெடுக்கும்.

செல்களுக்கு இடையில் தங்கி உடலில் வயோதிக மாற்றத்தை வேகமாகத் தூண்டுவது ஃப்ரீ ரேடிக்கல்ஸ் (Free Radicals). ஆன்டி ஆக்ஸிடெண்ட் அதிகமுள்ள புதினா , க்ரீன் டீ, பப்பாளி, மாதுளை ஆகியவற்றைச் சாப்பிடுவதன் மூலம் எதிர்கொள்ளலாம்.

தண்ணீர் முதியவர்களுக்குத் தாகம் குறைவாகவே இருக்கும். எனினும், அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். கல்லீரல், சிறுநீரகம், இதயம் நன்றாக இயங்கக்கூடிய முதியவர்கள் ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும்.

 

Comments