சித்த மருத்துவக் குறிப்புகள்(சருமநோய் குணமாக)

1) அக்கூல் பகுதி :- தினமும் குறைந்தது இருமுறையாவது தண்ணீர். விட்டு நன்கு கழுவிஈரம் இல்லாமல் துணி கொண்டு துடைக்க வேண்டும். 

2.சீலைபேன் ஒழிய நாய் துளசி இலையுடன் வசம்பு சேர்த்து அரைத்து உடல் முழுவதும் பூசிக் குளிக்கலாம். உரைத்து தடவ வேண்டும். 

3. படர் தாமரை தீர :- சந்தனகட்டையை எலுமிச்சைச் சாற்றில் 

4.கரப்பான் கிரந்தி குணமாக :- ஆடாதொடை இலை, சங்கன் இலை கஷாயம் செய்து சாப்பிடலாம்.

 5.சொறி, சிரங்கு, மேகநோய் தீர :- நன்னாரி வேர் சிதைத்து ஒரு நாள் ஊற வைத்து குடித்து வரவும். 

6. கருப்புநிற படைக்கு :- உப்புடன் கல்யாண் முருங்கை இலையைச் சாறு எடுத்து கலந்து படையின் மீது தடவி வர குணமாகும். 

7.கரும்படை குணமாக :- கோவை இலை சாறு, கருஞ்சீரகப் பொடி 5 கிராம் சேர்த்து அரைத்து படை மீது பூசி 1 மணி நேரம் கழித்து குளிக்கவும். தொடர்ந்து பூசி வர குணமாகும்.

 8. நமைச்சல் சிரங்கு தீர :- துளசி இலையை அரைத்து பூசி குளிக்க வேண்டும்.

 9.வேர்குரு :- பப்பாளி பாலை வெங்காய சாறுடன் கலந்து தடவி வரலாம்.

 10.சொறி, சிரங்கு தீர :- பிரமதண்டு இலை சாறு 10 மி.லி. வெறும் வயிற்றில் 1 வாரம் குடித்து வரவும்.

 11. சிரங்கு ஊரல் தீர :- வெள்ளருகு சமூலம் அரைத்து வெந்நீரில் கலந்து பூசி 1 மணி நேரம் கழித்து குளிக்கவும். 

12. படர்தாமரை குணமடைய :- பூவரசு காயின் சாற்றை தடவவும்

 13. தோல் வியாதிகள் தீர :- 100 ஆண்டுகள் ஆன பூவரசு மர காய், பூ பட்டை பொடி செய்து சாப்பிட்டு வரலாம் 

 14.தேமல் சரியாக :- கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் உலர்த்தி பொடி செய்து தினமும் உடம்பிற்கு தேய்த்து குளித்துலாலாம். 

15.சருமநோய்: மஞ்சள். வேப்பிலையை அரைத்து பூச குணமாகும். 

16.தோல் நோய் :- குப்பைமேனி இலை, மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்து பூசி அரை மணி நேரம் குளிக்கலாம். 

17. தேமல் படை குணமாக :- நாயுருவி இலை சாறை தடவி வரலாம்.

 18.செரியாமை, தோல் நோய்கள் தீர :- நன்னாரி வேர் கஷாயம் சாப்பிட்டு வரலாம். 

19. உடல் நாற்றம் நீங்க :- பற்பாடகம் இலையை பாலில் அரைத்து பூசி குளிக்கலாம். 

20.தோல் வியாதி அகல :- மண் பற்றிட்டு ஒன்னரை மணி நேரம் இளம் வெயிலில் (காலை குளிக்கலாம். 

21.தோல் வியாதி குணமாக :- சுகரை செடியின் வேரை பழம் சாறுவிட்டு அரைத்து பூசலாம் எலுமிச்சம் 

22. சருமநோய் தீர -மஞ்சள். வேப்பிலையை அரைத்து எல்லா சருமநோய்களுக்கும் பூசவும் 

23. தோல்வலி நீங்க :- மாதுளம், அன்னாச்சி, திராட்சை. எலுமிச்சை. நெல்லிக்கனி சாப்பிடலாம் 

24. தேமல் குணமாக :- வெள்ளைபூடை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வரலாம். 

25.உண்ணி உதிர :- சிகப்பு நாயுருவி இலையுடன் சலவை சோடா சிறிது சுண்ணாம்பு கலந்து தடவவும். 

26. கரப்பான் சொறி சிரங்கு :- பிரமதண்டு இலையை அரைத்து பூசிவர கரப்பான் சொறி சிரங்கு உள்ளங்கை, உள்ளங்கால்களில் வலி, பாதங்களில் வரும் புண் ஆறும். 

27.தோல் நோய்கள் தீர:- நன்னாரிவேர் கஷாயம் சாப்பிட்டுவர தீரும்

 28, சொறி சிரங்கு புண் ஆற :- கோவை இலை கஷாயம் சாப்பிட்டு வா ஆறும். 

29. சொறி சிரங்கு, படை ஆற :- நிலாவரை கஷாயம் தடவிவர ஆறும். 

30. சொறி, சிரங்கு படைதீர :- கோவை இலைசாறு நல்லெண்ணையில் காய்ச்சி கேய்த்து குளிக்க தீரும். 

31. சிரங்கு ஆற :- புன்னை பூவை அரைத்து சிரங்கு மீது தடவ தீரும் 

32. சொறி, சிரங்கு, நமைச்சல் :- அருகம்புல், குப்பைமேனி வேர் மிளகு சேர்த்து அரைத்து சாப்பிட்டுவர தீரும். 

33.தேமல் :- அருகம்புல், கஸ்தூரிமஞ்சள், மருதோன்றி அரைத்து 'தொடை இடுக்குகளில் பூச குணமாகும்.. 

34. படர் தாமரை மறைய :- கொன்றை இலை தளிர்புளிய இலை தளிர் மிளகு சேர்த்து அரைத்து பூச படர் தாமரை மறையும். 

35. சொறி, சிரங்கு தீர - கொன்றைவேர்பட்டைபொடி தேங்காய்- எண்ணையில் காய்ச்சி தடவிவர சொறி சிரங்கு விரைவில் மறையும். 

36.சொறி, சிரங்கு குணமாக :- அறுகம்புல தைலம் தேய்த்து குளித்து வரலாம். 

37. வேர்குரு :- சாதம் வடித்த கஞ்சியை தடவி சிறிது நேரம் கழித்து குளிக்கலாம். 

38. சொறி, சிரங்கு தீர :- எழுத்தாணி பூண்டு இலை நல்லெண்ணையில் காய்ச்சி உடம்பில் பூசலாம் 

39.சொறி, சிரங்கு குணமாக :- பூவரசு பழுப்பு இலையை கருக்கி தேங்காய் எண்ணெய்யில் கலந்து போட சொறி, சிரங்கு குணமாகும்.

 40. சொறி, சிரங்கு தீர :- சிவனார் வேம்பு இலைகளை சாம்பலாக்கி தேங்காய் எண்ணெய்யில் குழைத்து தடவ சொறி, சிரங்கு தீரும்.

 41. சிரங்கு தீர :- அருகம்புல் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் பூசி 1 மணி நேரம் கழித்து குளிக்க சிரங்கு தீரும். 

42.சொறி, சிரங்கு :- கஞ்சாங்கோரை இலையை அரைத்து சொறி, சிரங்கு தீரும். பூசி குளிக்க

43.சொறி, சிரங்கு, புண் ஆற :- கோவை இலை கஷாயம் குடித்து வர தீரும். 

44. புண், சிரங்கு தீர :- நுனா இலையை அரைத்து பற்றுப்போட புண். சிரங்கு தீரும் 

45. சிரங்கு ஆற :- காட்டர்மணக்கு எண்ணையுடன் தேங்காய் எண்ணை கலந்து பூசலாம். 

46.சொறி, சிரங்கு தீர:- கொன்றைவேர் கஷாயம் குடித்து வரலாம். 

47. சொறி, சிரங்கு :- பீச்சங்கு இலை சாறு விளக்கெண்ணையுடன் காய்ச்சி அரைகரண்டி குடித்துவர குணமாகும். 

48. சிரங்கு :- அருகம்புல் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் பூசி.1 மணி நேரம் கழித்து குளிக்கலாம். 

49. தோல் நோய் பொடுகு நீங்க :- பொடுதலை சமூலசாறு. நல்லெண்ணை காயச்சி வாரம் 2 முறை தலை முழுகலாம். 

50. தோல்நோய்கள் தீர :- வேப்பவிதை வெல்லம் சேர்த்து அரைத்து 3 கிராம் அளவு 48 நாட்கள் சாப்பிடலாம். 

51.கருப்புநிறபடைக்கு :- உப்புடன் கல்யாண முருங்கை இலைச்சாறு எடுத்து கலந்து படையின் மீது தடவலாம். 

52. கரும்படை :- ஜாதிக்காய் அரைத்து தடவலாம். 

53.சிரட்டை தைலம் - தோல் வியாதிக்கு அருமையான மருந்து 

54. உடல்வீக்கம், தோல் நோய் குணமாக - தக்காளிக்காய் சாப்பிடலாம். 

55. சொறி, சிரங்கு குணமாக - பூவரச மரத்தின் பழுப்பு இலையை வெயிலில் காய வைத்து குழைத்து பூசி வரலாம். 

56. சொறி, சிரங்கு, படை தீர :- கோவை இலை சாறு நல்லெண்ணையில் காய்ச்சி தலை முழுகலாம். 

57. சொறி, சிரங்கு, படை தீர - நிலஆவரை கியாழத்தை தடவி வரலாம்.

தவறுகள் இருந்தால் தங்களுக்கு தேறிய படுத்தவும்

நன்றி

Comments