சித்த மருத்துவக் குறிப்புகள்(பெண்கள் கருப்பை - சுகப்பிரசவம்)

 1.கருப்பை பலமடைய :- சதகுப்பை, கருஞ்சீரகம்: மரமஞ்சள் சமஅளவு அரைத்து பனைவெல்லம் சேர்த்து 5 கிராம் காலை, மாலை சாப்பிட்டு வர வின்ளியலாம்.

2.கருவுற்ற தாய்மார்கள்:- சாப்பிட சிறந்த பழம் மாம்பழம். 

3. சுகப்பிரசவம் ஆக:- ஆடு தின்னா பாளை வேர் சூரணம் 5 கிராம் வெந்நீரில் கொடுக்கலாம்.

 4.கர்ப்பாயாச கோளாறு நீங்க :- சிறுகுறிஞ்சா இலை, களாஇலை அரைத்து வெறும் வயிற்றில் குடிக்கவும் 

5.கருச்சிதைவு ஏற்படாமல் தடுக்க :- அசோகபட்டை, மாதுளை வேர். மாதுளை தோல் பொடிசெய்து 3 சிட்டிகை 3 வேளை சாப்பிடலாம். 

6.சுகப்பிரசவம்:- ஆடாதொடை வேர் கஷாயம் கடைசி மாதத்தில் காலை, மாலை 10மி.லி. குடிக்கலாம். 

7.கருப்பை குறைபாடுகள் நீங்க :- பருத்தி இலைசாறை தேனுடன் கலந்து சாப்பிடலாம். 

8.குழந்தையின்மை நீங்க :- பெண்கள் வேப்பம் பூவுடன் மிளகு  சேர்த்து பவுடராக்கி சாப்பிட்டு வரலாம். 

9. கர்பப்பை புழு நீங்க :- மாதவிடாய் முதல் 3 நாட்கள் வெள்ளறுகு சமூலத்தை அரைத்து 2 கிராம் அளவு சாப்பிடலாம். 

10. சுகப்பிரசவம் ஆக :- ஆப்பிள்பழம், தேன். ரோஜா இதழ், குங்குமப்பூ. ஏலக்காய் ஆகியவை ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். 

11. கருப்பை இறக்கம் குணமாக :- பழம், புளி, மஞ்சள், கரிசலாங்கண்ணி அரைத்து 1கிராம் காலை, மாலை 21 நாட்கள் சாப்பிடவும். 

12. குழந்தை சிவப்பாக பிறக்க: கர்ப்பிணிப் பெண்கள் வெற்றிலை பாக்குடன் குங்குமப்பூவை சேர்த்து சர்ப்பிடலாம். 

13. பிள்ளைபேறு உண்டாக :- மாதுளை வேர்பட்டை விதை பொடி 3 கிராம் காலை, மாலை வெந்நீரில் சாப்பிட்டு வரவும். 

14. கர்பப்பை நோய்கள் தீர :- கொடிவேலி வேர்பட்டை அரைத்து பாலில் காலை, மாலை 21 நாட்கள் சாப்பிடலாம். 

15.பெரும்பாடு தீர, கர்பப்பை பலப்பட :- வெட்சிபூவை அரைத்து அருகம்புல் சாறு கலந்து குடிக்க பெரும்பாடு தீரும், கர்பப்பை பலப்படும்.

நன்றி

Comments