சித்த மருத்துவக் குறிப்புகள் (குழந்தைகளுக்கு சிறப்பு ஆலோசனை)

1.)குழந்தைகளுக்கு :- 6லிருந்து 12 மாதம் வரை தாய்ப்பாலுடன் ஆட்டுப்பால் ,பழச்சாறு, பாம்பால் கொடுக்க வேண்டும்.

2.போலியோ சொட்டு மருந்து - தயாரித்த இடத்திலிருந்து குழந்தையின் வாயில் விழும் வரை 8 டிகிரி செல்சியஸ் குளிர்ந்த நிலையில் இருந்தால்தான் பயன்தரும்

 3. குழந்தைகளுக்கு தாழ்வு மனப்பான்மை உருவாகாமல் இருக்க:- குழந்தைகளை ஒப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். 

4. குறைமாத குழந்தை :- குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளை வாழை மட்டையில் வைத்து வளர்க்கும் முறை வழக்கத்தில் இருந்தது. 

5. பசும்பாலை விட சக்தி வாய்ந்தது:- குழந்தைகளுக்கு தேங்காயை சிறிய கீற்றுகளாக நறுக்கி கடித்து சாப்பிட கொடுக்கலாம். 

6. குழந்தைகளுக்கு மாந்தம் குணமாக :- கணப்பூண்டு இலைச்சாறு அரை கரண்டி கொடுக்கலாம். தேன் கலந்தும் கொடுக்கலாம். 

7.அக்கி குணமாக :- ஆலம் விழுதை சாம்பலாக்கி நல்லெண்ணையில் குழைத்து தடவி வந்தால் குணமாகும். 

8.வயிறு பெருத்து உடல் சிறியதாக உள்ள குழந்தைகளுக்கு :- கோரை கிழங்கை தோல் நீக்கி சூப் வைத்து கொடுக்கவும். 

9.எலும்பும் தோலுமான குழந்தைகள் நல்வளர்ச்சி உண்டாக :- பூசணிக்காயை துருவி பிழிந்து பிட்டவியலாக்கு சர்க்கரையுடன் சாப்பிட்டு வரவும்.

 10. குழந்தைகளுக்கு நோய் வராமல் தடுக்க :- வசம்பு இலை, மஞ்சள் சேர்த்து அரைத்து தேய்த்து குளிக்கலாம். மேனி அழகு பெறும். 

11. குழந்தைகளுக்கு ஏற்படும் தொடர் இருமலுக்கு :- -சிறிது பெருங்காயத்தை வெந்நீரில் கரைத்து தெளிந்த நீரை கொடுத்து வர குறையும். 

12.வயிற்றுப்புண் ஆற :- குழந்தைக்கு அம்மன் பச்சரிசி, சுண்டைக்காய் அளவு கொடுத்து வரலாம். 

13. குழந்தைகளுக்கு ஜீரண டானிக் :- சதகுப்பை விதையை கொதிக்க வைத்து சர்க்கரை சேர்த்து வடிகட்டி கொடுக்கலாம். 

14. காய்ச்சல் குணமாக :- நிலவேம்பு, சுக்கு, திப்பிலி, சீந்தில்பொடி. சிதைத்து கஷாயம் செய்து 10மி.லி குழந்தைகளுக்கு கொடுக்கலாம். 

15. கக்குவான் இருமல் தீர :- துளசி பூங்கொத்து, திப்பிலி, வசம்பு பொடி சர்க்கரை கலந்து 1 சிட்டிகைபொடி தேனில் கலந்து சாப்பிட கக்குவான் இருமல், தீரும்.

 நன்றி

Comments