1.நிறம் மாற :- முருங்கை வேர் துளசி வேர் அரைத்து பாலில் கலந்து பூசி குளித்து வரலாம்.
2.அழகு வசீகரம்:- கொன்றை வேர்பட்டை கஷாயம் குடித்து வரலாம்.
3. உடல்நிறம் பளபளக்க :- அவரி இலையை சுத்தம் செய்து நன்கு உலர்த்தி தூளாக்கி தினமும் 5 கிராம் காலை உணவிற்கு பின் சாப்பிட்டு வரலாம்
4.உடல் பொலிவு பெற :- கோரை கிழங்கு பொடி தேனில் சாப்பிட்டு வரலாம்.
5. மேனி நிறம் பொன்நிறமாக :- மஞ்சள் கரிசலாங்கண்ணி பொடி 5கிராம் அளவு 1 வருடம் தொடர்த்து சாப்பிட்டு வரலாம்.
6.தேகம் பொன்னிறமாக :- ஆவாரம்பூ தொடர்ந்து சாப்பிடலாம்.
7. முகம் பளபளக்க:- நாட்டு வாழைப்பழம் நன்றாக பழுத்தது ஆலில் ஆயில் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி 1 மணி நேரம் கழித்து முகம் கழுவி வரலாம்.
8. முகச்சுருக்கம் மறைய :- முட்டைகோ ஸ் சாறை முகத்தில் தடவி வரலாம்.
9.உடல் மினுமினுப்பாக -இரவில் படுக்கப்போகும் முன் தேன், குங்குமப்பூ. மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வரலாம்.
10. முகம் பளபளப்பாக :- எலுமிச்சை சாறு பிழிந்த ஆவியை முகத்தில், மூன்று நாட்கள் பிடித்து வரலாம்.
11. முகவசீகரம் பெற :- தூதுவளை பூ 10 பாலில் சர்க்கரை சேர்த்து காய்ச்சி 48 நாட்கள் குடித்து வரலாம்.
12.இளமையும், வசீகரமும் உண்டாக :- முக்கிரட்டை இலை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
13. உடல் வனப்பு உண்டாக :- முருங்கை பிசின் பொடி செய்து அரை ஸ்பூன் பாலில் சாப்பிட்டு வர வேண்டும்.
14.முகம் பளபளப்புடன் வழவழப்பாக:- இரவு புல்லின் மீது மெல்லிய துணியை விரித்து வைக்கவும் அதிகாலையில் துணியை பிழிந்து முகத்தில் தடவ பலன் கிடைக்கும்.
15.முகப்பொலிவும், வசீகரமும் உண்டாக :- முக்கிரட்டை இலையை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
16.முகப்பொலிவு இஞ்சி சிறு துண்டுகளாக நறுக்கி தேனில் ஊற வைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வரலாம்.
Comments