திருவாசகம் பொருளுரை (இல்லறம் நன்மக்கட்பேறு நல்லறம்)

இல்லறம் நன்மக்கட்பேறு நல்லறம்

இல்லறத்தின் வெற்றி நல்ல மக்களைப் பெறுதல். நன்மக்களைப் பெற்றால் மட்டும் போதாது.அவர்கள் நல்லறத்திற்கு வழிகாட்டுதல் வேண்டும். இதனை பெற்றோர் கடமை என வலியுறுத்தவே வாழ்க்கைத் துணைநலத்திற்கு (மனைவி) பத்தாவது குறளாக நன்மக்கட் பேற்றினை வைத்தார்.

நம்முடைய குழந்தைகளுக்கு தம்முடைய எதிர் காலத்தைப்பற்றி சிந்திக்க இயலாத வயது இதுதான். ஆனால் சிந்தித்து தீரவேண்டிய வயது இதுதான். ஏனெனில் நாம் வாழ்ந்துவரும் காலச்சமூகம் நுகர்வோர் காலச்சக்கரத்தின் கோரப்பிடியில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறது. இதன் உடனடி விளைவாய் நம்மண்ணிற்க்கே உரிய மரபார்ந்த மனித நேயம் பொய்யாய் புணைக்கதையாய், பழங்கதையாய் மாறிவிட்டது. இளம் இரத்தத்தின் ஜீவ அனுக்கள் சித்தத்தை துடிதுடிக்க வைக்கிறது. இன்றைய இளைஞர்களைப் பார்க்கும்பொழுது எப்படிப்பட்ட அபாயகரமான சூழ்நிலைக்கு வந்திருக்கிறோம். என்பதை எண்ணிப்பார்க்கும் போது அச்சமாய் உள்ளது.

இளைஞர்களின் மனம் வாழ்க்கையை எப்படியாவது அனுபவித்திடவேண்டும் என்ற தேடல் உள்ளது. அஞ்ஞான உலகில் ஆழ்கனவு காண்கின்றான். கனவு கலையும் முன் அவன் வாழ்வு கலைந்து போகிறது. அதனால் ஆணவக்கொலை, ஒருதலைக்காதலால் கொடுரக் கொலை, சாதீய படுகொலை ஒழுக்கக்கேடு இவைாயவும் ஒருமித்து விட்டது. நினைத்தது கிடைக்கவில்லை என்றால் தன்னைத்தானே அழித்துக்  கொள்கின்றான். நினைத்தது நடந்துவிட்டால் போதையில் புரளுகின்றான்.

ஒன்று அவமானம் இன்னொன்று ஆணவம் இந்த காலகட்டத்தில்தான் பக்குவப்படுத்த பக்தி நூல்களும்,அறநூல்களும் தேவைப்படுகிறது. இது காலத்தின் கட்டாயம்.

சமுதாயப் பண்பாட்டிற்கும். பயன்பாட்டிற்கும் பயன்தருவது திருக்குறள்.சமயப்பண்பாட்டிற்கும் பயன்பாட்டிற்கும் பயன்பெறும் பனுவல் திருவாசகம். இளைஞர்களின் மனமாகிய நிலத்தைப் பண்படுத்தித் திருக்குறள் கூறும் ஒழுக்கத்தை விதைக்க வேண்டும். இதனைச்செய்தல் பெற்றோரின் கடமை, அடுத்த கடமை ஆசிரியது ஆகும்.

என்னுடைய மகன்,மகள் சுத்தமாக இருக்கிறார்களா என்று பார்க்கும் முன் பெற்றோர்களாகிய நாம் சிறப்பாக இருக்கின்றோமா. என்ற ஆத்ம சோதனை செய்ய வேண்டும்.தவறாக செயல்படும் குழந்தைகளுக்குத் தமது பாசப்பிணைப்பால் மறைப்பது பேராபத்தாக முடியும்.  

பிள்ளைகளுக்கு நாம்தான் வழிகாட்ட வேண்டும். காராம் பசும் பாலில் கழிவு நீரும் கலப்பது போலத் தீய பழகங்களுக்கு நாமும், நமது குழுந்தைகளையும் ஆளாக்கிவிடலாமா, சிந்தியுங்கள்.

மல்லிகை பூத்து விட்டால் அதனை மாலையாக்க வேண்டும். இல்லையென்றால் வாடிவதங்கிவிடும். அதை வண்ணத்துப்பூச்சி நுகர்ந்து வட்டமிடாது.

இளைஞர்களுக்கு ஆரம்பபடிக்கட்டுகளை நன்கு அழகாகப்போட்டுக்கொடுத்துவிட்டால் எதிர்காலத்தில் துன்பம் இருக்காது.சோர்வும் இருக்காது. அவமானம் நிகழாது. பெற்றோர்கள் தருவது பாசமுடன் உணவு, ஆசிரியர் தருவது பகுத்தறியும் உணர்வு இது பிள்ளைகளுக்கு ஆன்மிக அனுபவத்தைக் கற்றுத்தரவேண்டும்.

ஆன்மீக அனுபவம் இருக்கிறதே அதுதான் நமது சுயமான அனுபவ உயர்வு. அந்த அனுபவ உயர்வைப் பெற்றோரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். எனவே பெற்றோர்களே உங்களை வணங்கி வேண்டிக்கொள்வது பிள்ளைகளுக்கு இறைவழிபாடு (பிராத்தனை) பயில நீங்கள் எடுத்துக்காட்டாக இருங்கள்.

இறைவழிபாட்டில் நால்வர் கொண்ட வழிமுறை:
இறைவனுக்கு உரியவர்களாக நம்மை நாமே முழு உரிமையுடைவர்கள் என்று கருதி ஒழுகுவது வாழ்க்கையில் நிகழும் பெரும்பிழை. என்றைக்கும் ஏழேழுப்பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம். என்பது இப்பிழையை நீக்க உதவும் உண்மை.

இறைவனுக்கு முற்றூட்டாகவும் முழு உரிமைப் பொருளாகவும் நாம் இருக்க வேண்டும். இடைவிடாது நாத்தழும்பேறும் வகையில் இறைவன் திருப்பெயரைக்கூறி வரும்போது உள்ளம், உரை,செயல் ஆகிய மூன்றும் இறைவன் திருவருட் குறிப்பின் வழி இயங்கும். அடைக்கலத்தின் திறத்தையும் சிறப்பையும் உணர்த்தும் வகையில் பெருமான் மாணிக்கவாசகர் அடைக்கலபத்தில் பாடியுள்ளதைக் காண்க. வன்தொண்டர் தில்லையில் திருநடனம் கண்ட நிலையைச் சேக்கிழார்.

ஐந்து பேரறிவுங் கண்களே கொள்ள அளப்பருங் கரணங்கள் நான்கும் சிந்தையே யாகக் குணமொரு மூன்றும் திருந்து சாத்து விகமேயாக இந்துவாழ் சடையான் ஆடும் ஆனந்த எல்லையில் தனிப்பெரு கூத்தில் வந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து மாறில்லா மகிழ்ச்சியில் மலர்ந்தார்.

இப்பாடலை நினைக்கும் போதல்லாம் நம் உள்ளமும் ஒருமையின்பத்தில் நினைப்பதை அறியலாம். சிவனைச் சிந்தித்து அதனைப்பெறுவோம். அதற்கானபயிற்சினைய பெறுவோம். கற்பகத்தருவை சேர்ந்தகாகமும் அமுதை உண்ணும் என்பதை போல அடியேன் நல்லாசிரியர்களின் அறிவுரையால் நானும் நன்மைகளை பெற்றேன். நல்லவற்றின் நடுவில் நாம் இருந்தால் வளரும் தலைமுறையும் அதன் வழிப்படும்.











Comments