17. முக வசீகரம் :- சந்தன கட்டை எலுமிச்சை சாறில் உரைத்து பூசலாம்.
18. முகம் நிறம் சிவக்க :- பப்பாளி கூழ் 50 கிராம். அருகம்புல் சாறு 10 கிராம். பன்னீர் 5 சொட்டு கலந்து தினசரி முகத்தில் தடவி 1 மணி நேரம் கழித்து கழுவி வந்தால் முகம் சிவக்கும்.
19. முகம் பளபளப்படைய :- காலையில் எழுந்ததும் அவரை இலை சாறை முகத்தில் தடவி 1 மணி நேரம் ஊறவைத்து பின் குளிக்கலாம்.
20. முகம் பளபளக்க :- மஞ்சள், சந்தனவாகை, புளியாரைச் செடி தண்ணீர் சேர்த்து அரைத்து முகத்தில் தடவிவர முகப்பரு நீங்கி, மாசு மரு உதிர்ந்து முகம் பளபளக்கும்.
21. முகம் பிரகாசமடைய :- கானாவாழை, மாவிலை சமஅளவு எடுத்து காய்ச்சி வடிகட்டி அதை முகத்தில் தடவி காயவிட்டு அரை மணி நேரம் கழித்து கழுவவும்.
22.மேனி பளபளப்பு பெற :- ஆரஞ்சு பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
23.தோல் வளம் பெற :- ஆலமரத்துப் பட்டைகளை பட்டுபோல் அரைத்து வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சர்க்கரை கலந்து வாரம் 1முறை பருகி வந்தால் சரும நோய் வராது தோல் வளமையாகும்.
24. தோல் வழவழப்பாக - மருதாணி இலையை அரைத்து கருப்பு தோல்மீது தேய்த்து வந்தால் கருப்பு மாறும்,
25.உடல் சிவப்பாக மாற :- வெள்ளரிக்காய், மஞ்சள். வேப்பம்பூ சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்துவர குணமாகும்.
26. முகவசீகரம் :- தூதுவளை பூ 10 பாலில் காய்ச்சி 48 நாட்கள் தொடர்ந்து குடிக்க முகவசீகரம் அழகு கூடும்.
27. உடல் வனப்பு உண்டாக :- முருங்கைபிசின் பொடி அரை கரண்டி காலை, மாலை பாலில் சாப்பிட்டுவர உடல்வனப்பு உண்டாகும்.
28. உடம்பு பொலிவு பெற :- கோரைகிழங்கு பொடி தேனில் சாப்பிட்டுவர உடம்பு பொலிவு உண்டாகும்.
29. முகம் அழகு பெற :- கஸ்தூரி மஞ்சள், விரலிமஞ்சள் சோற்றுக்- - கற்றாளை,சமஅளவு சேர்த்து அரைத்து முகத்தில் பூசிவர முகம் அழகாகும்.
30. முகம் மிளிர :- அரைத்த சந்தனத்தை பாலில் கலந்து முகத்தில் பூசிவர முகம் மிளிரும் (ரீ 5 ஸ்டாம்பு அனுப்பி ஒரு மருந்து விளக்கம் பெறலாம்)
31.உடல் சிவப்பாக :- வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ அரைத்து. தயிரில் கலந்து உடலில் பூசி ஊறவைத்து குளித்துவர உடல் சிகப்பாகும்.
32. முகம் அழகு கூட :- அருகம்புல்லை நீர்விட்டு அரைத்து வடித்து பின் வெல்லம் சேர்த்து பருகிவர உடலழகும் முகஅழகும் கூடும்.
நன்றி
Comments