1. ஒன்பது பிள்ளைக்கு ஒரே குடுமி அது என்ன?
* வெள்ளைப்பூண்டு
2, பூத்த போது மஞ்சள், காய்ந்த போது சிவப்பு, பழுத்த போது கறுப்பு அது என்ன? *பேரீச்சம்பழம்
3.அரைப்படி அரிசி பொங்கி ஆயிரம் பேர் உண்டு அரைச்சட்டி மிச்சம் அது என்ன ? *சுண்ணாம்பு அடிமேல்
4.அடிவாங்கி அனைவரையும் சொக்க வைக்கும் அது என்ன? *மிருதங்கம்
5.இரவல் கிடைக்காதது, இரவில் கிடைப்பது அது என்ன?
*தூக்கம்
6.காட்டிலே தொங்கும் பொட்டலம் காவல் நிறைந்த பொட்டலம். அது என்ன? *தேன்கூடு
7.பகலில் துயில் வான், இரவில் அலறுவான் அவன் யார்? *ஆந்தை
8. வெள்ளிப்பிசிறு வாயை மூடும், வெயில் வந்தால் கரைந்து மறையும் அது என்ன?
* பனி
9. சின்ன மீசைக்காரன், மியாவ் ஓசைக்காரன் அவன் யார்? *பூனை
10. பச்சைச் செடியில் தயிர் சாதம் அது என்ன ? *மல்லிகைப்பூ / செடி
11. பல்லைப் பிடித்து அழுத்தினால் பதறிப்பதறி அழுவாள் அவள் யார்?
*ஆர்மோனியப்பெட்டி
12. பீமனுக்கு சோறு போட்டு வீசியில் கிடப்பான் அவன் யார்? *இலை
13. பெத்த பிள்ளை கொடுக்காததை வளர்த்த பிள்ளை கொடுக்கும் அது என்ன ?
*தென்னம்பிள்ளை
14.பொரித்ததும் நடக்கும் அது என்ன?
*கோழிக்குஞ்சு
15. மரத்துக்கு மேலே பழம், பழத்துக்கு மேலே மரம், அது என்ன?
*அன்னாசிப்பழம்
16. பக்கத்தில் இருப்பான், படுத்தால் மறைவான் அவன் யார்?
*நிழல்
17. லிவிட் வீட்டுக்கு வந்த தொந்தியப்பன் தினமும் கரைகிறான். அவன் யார்? *நாட்காட்டி
18.தண்ணீரில் விளையும் கல், தண்ணீரில் கரையும் கல், அது என்ன?
*உப்புக்கல்
19. கணுக்கணுவாய் தெரிந்தாலும் அணு அணுவாய் இனிப்பான். அவன் யார் ? *கரும்பு
20.தரையிலும் இருப்பான், தண்ணீரிலும் இருப்பான் அவன் யார்?
*தவளை
21.தலையைச் சீவினால் தாளில் நடப்பான் அவன் யார்?
*பென்சில்
22. காட்டு மரம் என்றாலும் கானம் தரும் மரம். அது என்ன? *மூங்கில்
23. அடிக்கடி தாவுவான், அரசியல்வாதியல்ல. அவன் யார்?
*குரங்கு
24. அண்ணனுக்கு எட்டாது; தம்பிக்கு எட்டும். அது என்ன? *உதடு
25. ஆயிரம் பேர் அணிவகுப்பிலும் பொட்டுத் தூசி கிளம்பாது. அது என்ன? *எறும்பு
26. அட்டைக்கரிப் பெண்ணுக்கு உச்சந்தலை மஞ்சள் அவள் யார்?
*பனங்காய்
27.ஆவணி பிறப்பது எதனால், நாடகம் முடிவது எதனால்?
* ஆடிமுடிவதால்
Comments