விடாமுயற்சி தந்த பலன்
ஒரு கிராமத்தில் ஒரு ஏழைச் சிறுவன் வசித்து வந்தான். அவனின் பெயர் சூர்யா .அவன் குடும்பம் மிகவும் வறுமையில் வாடும் குடும்பம். ஒரு வேளை சாப்பாட்டிற்கு கூட கஷ்டப்படும் ஒரு குடும்பம். அச் சிறுவனின் தாய் அவனை அவ்வளவு கஷ்டத்திலும் பள்ளியில் படிக்க வைத்தனர். அவனது தாய் ஒரு வயலில் வேலை செய்து வந்தாள். சூரியா அவனது பள்ளியில் நன்றாக படித்து வந்தான். ஒரு சில மாதங்கள் கழித்து அவனுக்கு முழு ஆண்டு தேர்வு நடைபெற போகிறது அதற்கு அவன் மிகவும் நன்றாக தயாராக வேண்டும். அவனது வகுப்பு ஆசிரியர் அந்த வகுப்புக்கு ஒரு ஆலோசனை கொடுத்தார். இந்தத் தேர்வு சிறிது கஷ்டமானது தான் இந்த தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்க வேண்டுமென்றால் ஒரு புத்தகம் இருக்கிறது அதை படித்தால் இந்த தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கலாம் ஆனால் அந்தப் புத்தகத்தின் விலை 400 ரூபாய் என்றே கூறினார். 400 ரூபாய் என்பது அந்த வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு சாதாரண விஷயம், ஆனால் சூர்யாவுக்கு அது மிகவும் கடினமான விஷயம். ஆனால் அவனுக்கு அந்தப் புத்தகம் தேவைப்படுகிறது. இப்பொழுது அவனுக்கு என்ன பண்ணுவது என்று புரியவில்லை. மாலை அவன் தனது வீட்டிற்கு சென்று அவன் தாயிடம் கேட்ட போது அவர்களால் முடிந்தது வெறும் 50 ரூபாய் மட்டுமே. ஆனால் சூர்யாவிற்கு அந்த பணம் போதாது அதுமட்டுமின்றி அவனது பொது தேர்வு இன்னும் சில வாரங்களில் வந்துவிடும். மறுநாள் பள்ளிக்கு சென்றபோது அவன் வகுப்பு ஆசிரியர் ஒரு ஓவிய போட்டியை பற்றி பேசிக்கொண்டிருந்தார். அதாவது இந்த ஓவியப் போட்டியில் முதலில் வெற்றி பெறுவதற்கு 1000 ரூபாயும் , இரண்டாவதாக வெற்றி பெறுவதற்கு 500 ரூபாயும், மூன்றாவது வெற்றி பெறுவதற்கு 300 ரூபாயும் அளிக்கப்படும் என்று கூறினார்.சூர்யா இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் ஏனெனில் அவனுக்கு அந்த புத்தகம் வாங்க காசு வேண்டும் ஆனால் அவனுக்கு ஓவியத்தை பற்றி ஒன்றும் தெரியாது. இருந்தாலும் சூரியா அவனது நம்பிக்கையை மட்டும் வைத்து இந்த போட்டியில் கலந்து கொள்ள பெயர் கொடுத்தான். இந்தப் போட்டி இன்னும் இரண்டு நாளில் நடைபெறும் அதனால் சூர்யா அவனால் முடிந்த அளவிற்கு கடுமையாக ஓவியத்திற்கு பயிற்சி எடுத்துக்கொண்டான்.இரண்டு நாள் கழித்து அவன் அந்த ஓவிய போட்டியில் கலந்து கொண்டான். ஆனால் அவனால் முதல் பரிசு பெற முடியவில்லை அவனால் முடிந்தது மூன்றாவது பரிசு மட்டும்தான். இப்பொழுது மூன்றாவது பரிசாக அவனுக்கு 300 ரூபாய் கிடைத்தது ஆகமொத்தம் அவனிடம் இப்பொழுது 350 ரூபாய் உள்ளது. இருந்தாலும் அவனுக்கு ஒரு அம்பது ரூபாய் தட்டுப்படுகிறது. இப்பொழுது சூர்யா ஒரு முடிவுக்கு வந்தான் . அவன் ஒன்றை நன்றாக புரிந்து கொண்டான். அதாவது அவன் அவனது நம்பிக்கை மற்றும் விடாமுயற்சியால் மட்டுமே இந்த ஓவியப் போட்டியில் மூன்றாம் இடத்திற்கு வந்தான் அதனால் அவனுக்கு அந்தப் புத்தகம் தேவை இல்லை அவனுக்குத் தேவை விடாமுயற்சி. அதனால் பின் வரும் நாட்களில் அந்த புத்தகம் இன்றி விடாமுயற்சியோடு நன்றாக தேர்வுக்கு படித்து தேர்வில் முதலிடம் பெற்றான்.
நீதி: ஒரு பொருளில் வைக்கும் நம்பிக்கையை உன் மீது வைத்தாள் அது நிச்சயம் பலனளிக்கும்.
அதுமட்டுமின்றி ஒரு விஷயத்தை விடாமுயற்சியோடும், ஈடுபாடு ஓடும் செய்தாள் அது கண்டிப்பாக பலனளிக்கும்.
Comments